AK-64 குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்
நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் கூட்டணியில் உருவாகும் AK-64 படத்தின் அப்டேட் எப்போது வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இப்படத்திற்காக இருவரும் இணைந்துள்ளார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கின்றார்.

அஜித் தனது கார் ரேஸிங்கை முடித்து விட்டு வந்தவுடன் படம் குறித்து அப்டேட் வெளிவரும்.
இந்த நிலையில், விருது விழா ஒன்றில் AK 64 படத்தின் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் ஆதிக்.
அதாவது இப்படம் குறித்த அப்டேட் இந்த மாதம் இறுதிக்குள் வெளிவரும் என அவரே கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது