இளையராஜாவாக மாறப்போகும் தனுஷ்? வைரலாகும் பேட்டி

இளையராஜாவாக மாறப்போகும் தனுஷ்? வைரலாகும் பேட்டி
  • PublishedAugust 1, 2023

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பதை கடந்து பாடகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமைகொண்டவராக உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் தனுஷை இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கவைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் பாலிவுட் இயக்குநர் பால்கி.

photo

இந்த நிலையில் தனுஷை வைத்து ‘ஷமிதாப்’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் பால்கி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது,

“தனுஷ் மிகவும் எளிமையான மனிதர், அவர் ஒரு நடிகர் என்பதை கடந்து பன்முக திறமை கொண்டவர். குறிப்பாக அவரது எழுத்து மற்றும் இயக்கத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். என்னுடைய நீண்டநாள் கனவே தனுஷை வைத்து இளையராஜவின் பயோபிக்கை இயக்கவேண்டும் என்பதுதான். அப்படி நடந்தால் அவருக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய பரிசாக அது இருக்கும் ஏனென்றால் அவருக்கும் இளையராஜாவை மிகவும் பிடிக்கும்” என பால்கி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனுஷின் குரலும் இளையராஜாவின் குரலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதாகம் பலரும் தெரிவித்து வரும் நிலையில், இளையராஜா தனுஷை வைத்து பாடல் ஒன்றையும் பாட வைத்துள்ளார்.

சூரி படத்தில் இளையராஜா இசையில் தனுஷ் முதல் முறையாக பாடியிருந்தார்.  ‘ஒன்னோட நடந்தா’ என்ற பாடலை நடிகர் தனுஷ், இளையராஜா இசையில் பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *