ஜெயிலர் பட வெற்றியை முன்னதாகவே கணித்த விஜய்.. நெல்சன் நெகிழ்ச்சி

ஜெயிலர் பட வெற்றியை முன்னதாகவே கணித்த விஜய்.. நெல்சன் நெகிழ்ச்சி
  • PublishedAugust 29, 2023

நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது ஜெயிலர் படம்.

இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக நடித்திருந்தார் ரஜினிகாந்த். படத்தில் அவருக்கு மகனாக வசந்த் ரவி நடித்திருந்தார். அவரது கடத்தல் மற்றும் அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் ரஜினி எத்தகைய எக்ஸ்பீரியன்ஸ்களை சந்திக்கிறார் என்பதை மையமாக கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை உருவாகியிருந்தது.

இந்தப் படம் இயக்குநர் நெல்சனுக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், விஜய்யுடன் நெல்சன் இணைந்திருந்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

ஆனாலும் வசூலில் இந்தப் படம் சிறப்பாக அமைந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில்தான் ஜெயிலர் படத்தை இயக்கினார் நெல்சன்.

ஆனால் பீஸ்ட் படத்தின் விமர்சனங்களுக்கு மௌனம் காத்த நெல்சன், ஜெயிலர் படத்தில் சொல்லாமல் அடித்ததாக பாராட்டுக்களுக்கு உள்ளானார்.

இந்நிலையில் ஜெயிலர் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று 6 மாதங்களுக்கு முன்னதாகவே நடிகர் விஜய் கணித்ததாக நெல்சன் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் விடிவி கணேஷிடம் கூறியதாகவும், அவர் அதை தன்னிடம் பெருமையுடன் பகிர்ந்ததாகவும் நெல்சன் கூறியுள்ளார்.

முன்னதாக பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட, தன்னை தேற்றும்வகையில் விஜய், தொடர்ந்து கால் செய்தும், வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுடம் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும் நெல்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *