சிரஞ்சீவி குடும்பத்தில் வெடிக்கப் போகும் விவாகரத்து.. அதிர்ச்சியில் டோலிவுட் ரசிகர்கள்!

சிரஞ்சீவி குடும்பத்தில் வெடிக்கப் போகும் விவாகரத்து.. அதிர்ச்சியில் டோலிவுட் ரசிகர்கள்!
  • PublishedMarch 21, 2023

தெலுங்கு திரையுலகின் முன்னணி சினிமா குடும்பமாக சிரஞ்சீவியின் குடும்பம் பார்க்கப்பட்டு வரும் நிலையில், அந்த பெரிய குடும்பத்தில் திடீரென விவாகரத்து அறிகுறிகள் தென்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மெகா ஸ்டார் என ரசிகர்களால் போற்றப்பட்டு வரும் சிரஞ்சீவி இன்னமும் ஹீரோவாக ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் சமீபத்தில் தான் ஆஸ்கர் வரை சென்று RRR படத்தின் வெற்றியை தனது மனைவியுடன் கொண்டாடி வந்தார்.

தெலுங்கு திரையுலகில் சில முக்கிய நடிகர்களின் குடும்பங்கள் சினிமாவில் பெரிய குடும்பங்களாக வலம் வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் விவாகரத்து செய்தது டோலிவுட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவாகரத்து முதல் படியாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் இருந்து நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனியை நீக்கி இருந்தார்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் உபசனா ஜோடிகள் செம ஹேப்பியாக ஆஸ்கர் மேடை வரை சென்று அசத்தி வந்த நிலையில், சிரஞ்சீவியின் உறவுக்கார பெண்ணான நிஹாரிகா கோனிடேலா வாழ்க்கையில் தான் தற்போது விவாகரத்து சர்ச்சை கிளப்பி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரான நாகேந்திர பாபுவின் மகளான நிஹாரிகா கோனிடேலாவுக்கு சைதன்யா ஜொன்னலகடா என்கிற மணமகன் உடன் கடந்த டிசம்பர் 2020ல் தான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. சிரஞ்சீவி தலைமையில் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது நிஹாரிகா விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து கணவர் நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனியை நீக்கியதை போலவே தற்போது நிஹாரிகா கோனிடேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவர் பெயரை தூக்கி அடித்து இருப்பது தான் இந்த விவாகரத்து சிக்கல் விஸ்வரூபம் எடுக்க காரணம் என்கின்றனர்.

நிஹாரிகா கோனிடேலாவும் சமந்தாவை போல நடிகை தான். ஒக மனசு எனும் தெலுங்கு படத்திலும் தமிழில் விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 1947, பத்து தல என கவுதம் கார்த்திக் படங்கள் வரிசையாக வெளியாக உள்ள நிலையில், கவுதம் கார்த்திக் படத்தில் ஹீரோயினாக நடித்த நிஹாரிகாவும் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போறாரா அது தான் இந்த விவாகரத்துக்கான முயற்சியா என டோலிவுட்டில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *