விஜய் என்றாலே லவ்தாங்க – வாரிசு நடிகை பதிவிட்ட க்யூட் ட்வீட்

விஜய் என்றாலே லவ்தாங்க – வாரிசு நடிகை பதிவிட்ட க்யூட் ட்வீட்
  • PublishedMarch 21, 2023

நடிகர் விஜய் என்றாலே லவ்தான் என நடிகை ராஷ்மிகா மந்தனா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரது அழகையும், நடிப்பையும் பார்த்த தெலுங்கு திரையுலகம் ராஷ்மிகா மந்தனாவுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது.

விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். அதனையடுத்து டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் ராஷ்மிகா மந்தனாவின் மீதான க்ரஷ் ரசிகர்களுக்கு ஏறிய்க்கொண்டது. தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார். ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை நிரூபித்ததால் ராஷ்மிகா மந்தனாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை.தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இதனால் இந்திய அளவில் ராஷ்மிகா மந்தனா முன்னணி ஹீரோயினாக மாற ஆரம்பித்திருக்கிறார்.

ஹிந்தியில் அவர் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சாண்டல்வுட்டில் தொடங்கி டோலிவுட், கோலிவுட் என பயணப்பட ஆரம்பித்து இப்போது பாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கும் ராஷ்மிகாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என அழைப்பதுண்டு. அதுமட்டுமின்றி அவரை எக்ஸ்பிரெஷன் குயின் என்றும் அழைத்துவருகின்றனர்.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் விஜய் குறித்து ஒரே வார்த்தையில் சொல்ல சொன்னால் என்னவென்று சொல்வீர்கள் என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, லவ் என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது ராஷ்மிகாவின் இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழில் சுல்தான் படம் வெற்றியடையாத சூழலில் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். இந்தப் படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது. இருந்தாலும் ராஷ்மிகா மந்தனா விஜய்யின் தீவிரமான ரசிகை என்பது இந்தப் படம் மூலம் ரசிகர்களுக்கு உறுதியானது. வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யை அவர் ஒரு ரசிகையாக ரசித்தது, படத்தின் பூஜையில் அவருக்கு ராஷ்மிகா சுத்திப்போட்டது என அனைத்துமே சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *