அவர் ஏங்க கெட்டவரா இருக்கணும்.,லியோ குறித்து கருத்து சொன்ன ரோலக்ஸ் – ட்ரெண்டிங்காண வீடியோ

அவர் ஏங்க கெட்டவரா இருக்கணும்.,லியோ குறித்து கருத்து சொன்ன ரோலக்ஸ் – ட்ரெண்டிங்காண வீடியோ
  • PublishedMarch 21, 2023

விஜய் ஏன் கெட்டவராக இருக்க வேண்டும் என சூர்யா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தங்களது கேரியரின் ஆரம்பத்தில் இருந்து ஒன்றாக பயணம் செய்துவருபவர்கள் நடிகர்கள் விஜய்யும், சூர்யாவும். சூர்யா அறிமுகமான படம் நேருக்கு நேர். அந்தப் படத்தில் முதலில் அஜித் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் விலக சூர்யா அந்தப் படத்த்ல் கமிட்டானார். அதில் விஜய்யும் நடித்திருந்தார்.

இதனையடுத்து சித்திக் இயக்கத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான ப்ரெண்ட்ஸ் படத்திலும் விஜய்யும், சூர்யாவும் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆக; வடிவேலுவின் காமெடியும் கனெக்ட் ஆக படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. மேலும் அந்தப் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் விஜய்யும், சூர்யாவும் தங்களுக்குள் இருக்கும் நட்புணர்வை கோலிவுட்டுக்கு உணர்த்தினர். அதனயடுத்து இருவரது ட்ராக்கும் மாற இரண்டு பேரும் இணைந்து நடிக்கவில்லை.

விஜய்யை வைத்து ஆரம்பகாலத்தில் படங்களை இயக்கிய அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சூர்யாவை வைத்து பெரியண்ணா படத்தை இயக்கினார். விஜயகாந்த், மீனா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் சூர்யா வளர்ந்துவரும் காலகட்டத்தில் வெளியானது. அப்போது விஜய்யும் ஒரு வளர்ந்துவரும் ஹீரோ என்ற நிலையிலேயே இருந்தார். சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தில் , நான் தம் அடிக்கிற ஸ்டைலை பார்த்து பாடலை பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் விஜய்.

நடிகர் சூர்யா எப்போதும் விஜய்யின் திறமைகளை பார்த்து வியந்து பொதுவெளிகளில் பேசுபவர். அவரது நடனம் குறித்தும் ஒரு மேடையில், “கீழே உட்கார்ந்திருக்கார் பாருங்க ஒன்னுமே தெரியாத பிள்ளை மாதிரி. அவரது டான்ஸை பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒன்றுதான் தோன்றும் மனுஷன் எப்படி இப்படி ஆடுறார்” என ஏகத்துக்கும் விஜய்யை புகழ்ந்திருப்பார் சூர்யா.

இந்நிலையில் சூர்யா குறித்து விஜய் பேசியிருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. அதாவது சூர்யா விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய ‘ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர் ஒருவர் தான் விஜய்யின் ரசிகர் எனவும்; அவர் நல்லவரா கெட்டவரா என்ற கேள்வியை சூர்யாவிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த சூர்யா, “அவர் ஏங்க கெட்டவரா இருக்கணும். அவரது திறமையை பார்த்து நான் பலமுறை வியந்துபோயிருக்கிறேன்.

கல்லூரி காலத்திலிருந்து அவரை தெரியும் என்பதால் அவரது வளர்ச்சியை பார்த்த அனுபவம் இருக்கிறது” என்றார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் லியோ குறித்து ரோலக்ஸ் அப்போவே இப்படி பேசியிருக்கிறாரே என விஜய் ரசிகர்கள் சிலாகித்துவருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். அவர் கமலை வைத்து இயக்கியிருந்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யாவை நடிக்க வைத்திருந்தார். மேலும் எல்சியூவை பயன்படுத்தி விக்ரம் திரைக்கதையை அமைத்திருந்தார். எனவே லியோ படமும் எல்சியூவில் வரும் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் லியோ படத்தில் சூர்யாவும் நடிகக் வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *