சூர்யா அப்படி செய்வார்னு நா நினைக்கல – பிரபல நடிகை ஓபன்

சூர்யா அப்படி செய்வார்னு நா நினைக்கல – பிரபல நடிகை ஓபன்
  • PublishedApril 3, 2024

செய்தி வாசிப்பாளராக இருந்த திவ்யா துரைசாமி, 2019 ஆம் ஆண்டு வெளி வந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எதற்கும் துணிந்தவன் படத்தில் திவ்யா துரைசாமியை சூரியா தோளில் தூக்குவது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திவ்யா துரைசாமி எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், எதற்கும் துணிந்தவன் படத்தின் ஷூட்டிங்கில் சூர்யா என்னை தூக்கிவிடுவாரா? நான் ஓவர் வெயிட்டா இருக்கேனே என பயந்து கொண்டு இருந்தேன்.

ஆனால் என்னை அவர் அசால்டாக தூக்கிவிட்டார். அவர் தூக்கியதும் எனக்கு உன்மையில் மயக்கமே வந்துவிட்டது என தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் திவ்யா துரைசாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *