கிரைம்… திரில்லர்… அதர்வாவின் DNA எப்படி இருக்கு?

கிரைம்… திரில்லர்… அதர்வாவின் DNA எப்படி இருக்கு?
  • PublishedJune 20, 2025

நடிகர் அதர்வா நடிப்பில் உருவான டிஎன்ஏ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அதர்வாவுக்கும் நிமிஷா சஜனுக்கும் திருமணம் நடக்கிறது. இருவரினதும் குழந்தை கடத்தப்படுகிறது. அதர்வா – நிமிஷாவின் குழந்தையைக் கண்டுபிடிக்கிறார்களா? கடத்தல் பின்னனியில் இருந்தது யார்? என்கிற அழுத்தமான கேள்விகளுடன் பரபரப்பான படமாக உருவாகியிருக்கிறது டிஎன்ஏ.

தன் குழந்தையைக் காணவில்லை என அதர்வா தேடும் காட்சிகளில் டுவிஸ்டுகள் அவிழ கிளைமேக்ஸில் இருக்கை நுனிக்கே நம்மை அழைத்துச் செல்கின்றனர். தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த கிரைம் திரில்லர் படங்களில் டிஎன்ஏ-க்கும் இடமுண்டு.

பார்வையாளர்களை ஏமாற்றி வெற்றிபெறும் திரைக்கதையை நம்பாமல் உண்மையாகவே ஒரு குற்றச் செயலுக்குப் பின் எவ்வளவு விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து இப்படத்தின் கதையை உருவாக்கியிருப்பது திரையில் தெரிகிறது.

நடிகர் அதர்வாவுக்கு இதுதான் திருப்புமுனை படமாக இருக்கும். வெற்றியைப் பார்த்து நீண்ட நாள்கள் ஆனவருக்கு நல்ல வாய்ப்பாக டிஎன்ஏ அமைந்திருக்கிறது. பழைய அதர்வா இல்லை. சிரிப்பையும் அழுகையையும் பார்வையாளருக்கு உணர்ப்பூர்வமாகக் கடத்துகிறார். நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. கதை தேர்வுகளில் கவனம் செலுத்தினால் நல்ல இடம் காத்திருக்கிறது.

ஒரு சுவாரஸ்யமான கிரைம் த்ரில்லர் படம் வெற்றி பெறலாம். அதில், உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தி எமோஷனல் திரில்லராக மாற்றி இன்னும் அழுத்தமான வெற்றியைப் பெறலாம். டிஎன்ஏ இதில் இரண்டாம் வகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *