சில்க் ஸ்மிதாவின் அம்மாவை பார்த்து இருக்கீங்களா?

சில்க் ஸ்மிதாவின் அம்மாவை பார்த்து இருக்கீங்களா?
  • PublishedMarch 16, 2024

இந்தியாவின் மர்லின் மன்றோ, தென்னாட்டு பேரழகி, காந்த கண் அழகி என அழகில் இன்னும் எத்தனை சொல் உள்ளதோ அனைத்துக்கும் பொருத்தமானவர் நடிகை சில்க் சுமிதா மட்டுமே, நாடே வியந்து கொண்டாடிய சில்க் ஸ்மிதாவை பெற்ற அம்மாவை பார்த்து இருக்கிறீர்களா?

80களில் திரையுலகத்தையே ஆட்டிப்படைத்த சில்க் ஸ்மிதாவை இன்றைய 2கே கிஸ்ட்கள் தேடும் கிளுகிளுப்பு நாயகியாக உள்ளார்.

இவர் படத்தில் ஒரு டான்ஸ் ஆடினாலே போதும், அந்த படத்தைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர் வாசலில் படையெடுப்பார்கள். நடிகை சில்க் ஸ்மிதா வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்து வாழ்ந்து, பின் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

பலத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். பல நடிகைகள் இவருடைய நடிப்பை கண்டு வியந்து பாராட்டி இருக்கிறார்கள். இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விகளாலும் , குடி பழக்கத்தினாலும் மன அழுத்தத்திற்கு ஆளானார்.

திடீரென ஒரு நாள் வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். அவருடைய மரணம் மிகவும் மர்மமானதாகும், கொலை, தற்கொலை என மாறி மாறி சொல்லப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்தார்களா? இல்லையா? என்பதுக்கூட தெரியாது.

அந்த மர்மமான மரணத்தின் காரணங்கள் மண்ணோடு மண்ணாகிப்போனது. இவருடைய இழப்பு ஒட்டுமொத்த திரை உலகிற்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

கோடீஸ்வரன் முதல் கிழவன் வரை அனைவரும் விரும்பிய நடிகையாக இருந்த சில்க் ஸ்மிதா இந்த உலகை விட்டு மறைந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத நடிகையாக இருக்கிறார்.

சில்க் ஸ்மிதா இன்று இல்லை என்றாலும் சோசியல் மீடியாவில் சில்க் ஸ்மிதா பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அந்த வகையில், நடிகை சில்க் ஸ்மிதா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சில்க் ஸ்மிதா இறந்த போது, அவரது அம்மா கதறி அழுத புகைப்படமும் டிரெண்டாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *