500 சவரன் நகை.. விலை உயர்ந்த புடவை… பிரம்மாண்டமாக நடந்த ராதாவின் மகள் திருமணம்.. வைரலாகும் ரகசியம்

500 சவரன் நகை.. விலை உயர்ந்த புடவை… பிரம்மாண்டமாக நடந்த ராதாவின் மகள் திருமணம்.. வைரலாகும் ரகசியம்
  • PublishedNovember 26, 2023

நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயரின் திருமணத்திற்கு 500 சவரன் தங்க நகையை ராதா வரதட்சனையாக கொடுத்துள்ளார்.

நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுக்கும், ரோஹித் மேனனுக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது.

திருவனந்தபுரத்தில் நடந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மண மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகை ராதாவின் மகள் தமிழில் கோ படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். 2015ஆம் ஆண்டு வெளியான புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்திற்கு பிறகு கார்த்திகா நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. படவாய்ப்பு இல்லாததால், அப்பாவின் ஹோட்டலை கவனித்துக்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் கார்த்திகாவுக்கும், ரோஹித் மேனன் என்பவருக்கும் கேரளாவில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. அந்த திருமணத்தின் போது கார்த்திகா நாயர் அணிந்திருந்த புடவை மற்றும் நகை அனைவரையும் கவர்ந்த நிலையில், தற்போது வரை அது இணையத்தில் பேசுபொருளாகவே உள்ளது.

இதுகுறித்து, வீடியோ வெளியிட்டுள்ள பயில்வான் ரங்கநாதன், நடிகை ராதா பல ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சொந்தக்காரி, சினிமாவில் சம்பாதித்த பணம் அனைத்தையும் அவர்கள் நட்சத்திர ஓட்டலில முதலீடு செய்துள்ளனர். அதே போல தனது மகளை நடிகையாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், அவர்கள் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், கார்த்திகா நாயகருக்கு படவாய்ப்பு வரவில்லை என்பதால் திருமணம் செய்து வைத்துள்ளார்.

நடிகை ராதிகா மற்றும் அம்பிகாவிற்கு சென்னையில் சுமார் 25 ஏக்கர் நிலத்தில் ஸ்டோடியோ உள்ளது. அதே போல திண்டுக்கல்லில் சொந்த மில் ஒன்று உள்ளது. பல கோடிக்கு சொந்தக்காரியான ராதா தனது மகளுக்கு 500 சவரன் நகையை போட்டு தனது மகளுக்கு திருமணம் செய்துள்ளார். ரோகித் என்பவருக்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் சொந்து இருக்கும்,நிச்சயமாக அவர் ஒரு தொழிலதிபராகத்தான் இருப்பார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *