கடவுளே!அஜித்தே.. இந்த கோஷம் முதலில் எங்க, யார் ஆரம்பிச்சது தெரியுமா?
கடவுளே! அஜித்தே! சமீப காலமாக பெரிய அளவில் வைரலாகி கொண்டு இருக்கும் கோஷம். இதை அஜித் ரசிகர்கள் மட்டும்தான் சொல்கிறார்களா என்று கேட்டால் அது சந்தேகம்தான்.
சும்மா ஜாலிக்காக போற போக்கில் அஜித் ரசிகர்கள் இல்லாதவர்களும் இதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த அஜித் நேற்று தன்னுடைய மேனேஜர் மூலம் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டி இருக்கிறார்.
இனி யாரும் இந்த மாதிரியான கோஷத்தை எங்கும் எழுப்பக் கூடாது என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ரசிகர்கள் ஆரம்பித்தது அஜித் நடித்த விடாமுயற்சி படம் வரைக்கும் வந்துவிட்டது.
அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் அனிருத் வெளிநாடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார்.
அந்த மேடையில் அவர் இந்த கடவுளே அஜித்தே என்னும் கோஷத்தை ரசிகர்களுடன் சேர்ந்து எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
இது வைரலாகி கொண்டு இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் எங்கே ஆரம்பித்தது என்பது ஒரு சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சில மாதங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்கள் ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்றிருக்கிறார்கள்.
அப்போது பரோட்டா மாஸ்டர் கொத்து பரோட்டாவை செய்யும்போது வரும் சத்தத்திற்கு ஏற்ப முதலில் அஜித்தே என்று ஆரம்பித்து பின்னர் கடவுளே அஜித்தே என சத்தமிட ஆரம்பித்தார்கள்.
இந்த வீடியோ பெரிய அளவில் வைரலானது. இதை தொடர்ந்து எந்த பக்கம் பார்த்தாலும் இந்த கோஷம் எழுந்து கொண்டே இருந்தது.
தமிழக வெற்றி கழகம் கட்சி மாநாடு, பெரிய தியேட்டர்கள், மால்கள், அரசியல் தலைவர்கள் கூடும் கூட்டங்கள் என எல்லா இடத்திலும் கோஷம் எழுப்ப ஆரம்பித்தார்கள்.
ஒரு சின்ன வீடியோவாக ஆரம்பித்து வெளிநாட்டில் நடக்கும் பாட்டு கான்செட் வரைக்கும் இது வைரலானது.
இதனால் தான் அஜித் நேற்று தன்னுடைய ரசிகர்கள் இனி இதை உபயோகப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி இருக்கிறார்.
எப்படி பார்த்தாலும் விடாமுயற்சி படத்தின் தீம் சாங் இதுதான். அஜித்தின் அறிக்கைக்கு பிறகு இந்த பாடல் நீக்கப்படுமா அல்லது படத்தில் இருக்குமா என தெரியவில்லை.
ஒருவேளை இந்த பாடல் அந்த படத்தில் இருந்தால் கண்டிப்பாக மீண்டும் கடவுளே அஜித்தே வைரலாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.