ஆவணப்படமாகும் அஜித்தின் சுற்றுலா பயணம் – வித்தியாசமான முயற்சிக்கு ஐடியா கொடுக்கும் ஒளிப்பதிவாளர்!
நடிகர் அஜித்குமார் தன்னுடைய இருசக்கர வாகனக் குழுவோடு சுமார் 18 மாதங்கள் உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டது.
அவரின் பட வேலைகளால் இந்த சுற்றுப்பயணம் இடைவெளி இடைவெளி விட்டு நடக்கும் என தெரிகிறது.
இந்நிலையில் இப்போது இந்த சுற்றுப்பயணம் பற்றி கூடுதல் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தன்னுடைய சுற்றுலாவை ஒரு ஆவணப்படமாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளாராம்.
இதற்காக வலிமை மற்றும் துணிவு படங்களின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் அஜித்தோடு சில இடங்களுக்கு பயணித்து ஆலோசனைக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மற்றும் பைக் சுற்றுலா பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.