கடவுள் இருக்கிறாரா இல்லையா : ரஜினிகாந்த் விளக்கம்!
கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்து எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்தை இரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நமது உடலில் உள்ள இதயம் லப்டப் லப்டப் என்று பிறந்ததிலிருந்து சுமார் 70 வருடம் 80 வருடம் வரை அடித்துக் கொண்டிருக்கிறது.
எந்த விஞ்ஞானியாவது இப்படி ஒரு மெக்கானிசத்தை செய்ய முடியுமா. அதேபோல் நமது உடலில் உள்ள ரத்தத்தில் உள்ள ஒரு துளியாவது விஞ்ஞானிகளால் செய்ய முடியுமா? என்று கேட்டார்.
இதையெல்லாம் பார்த்தும் ஒரு சிலர் கடவுள் இல்லை என்று கூறியதை பார்க்கும்போது எனக்கு அழுவதாக சிரிப்பதா என்று தெரியவில்லை என்று கூறினார். இவர் பேசிய இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.