GOAT படத்தில் சிறப்புத்தோற்றத்தில் “தல”?… அந்த தல யார்னு தெரியுமா?

GOAT படத்தில் சிறப்புத்தோற்றத்தில் “தல”?… அந்த தல யார்னு தெரியுமா?
  • PublishedMarch 28, 2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து வரும் கோட் திரைப்படத்தில் தல டோனியும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படம் கோட், வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் லைலா, பிரபுதேவா, சினேகா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, பார்வதி மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கோட் படத்தில் நடித்து வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, அப்படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

அந்த வகையில் கோட் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் கேரளாவில் நடைபெற்றது. இதற்காக கேரளா சென்றிருந்த நடிகர் விஜய்க்கு அங்குள்ள ரசிகர்கள் அளித்த வரவேற்பை பார்த்து மலையாள திரையுலகமே ஷாக் ஆகிப்போனது. அங்குள்ள முன்னணி நடிகர்களுக்கே கிடைக்காத வரவேற்பு விஜய்க்கு கிடைத்திருந்தது.

கேரளாவில் உள்ள கிரீன் ஃபீல்டு என்கிற கிரிக்கெட் மைதானத்தில் தான் கோட் பட ஷூட்டிங் நடைபெற்றது.

அப்போது கிரிக்கெட் சம்பந்தமான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு அப்படத்தில் இருந்து ஒரு ஹாட் அப்டேட்டும் வெளிவந்துள்ளது.

அதன்படி, கோட் படத்தில் தல தோனியும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கிரிக்கெட் சம்பந்தமான காட்சியில் தோனியும், விஜய்யும் இணைந்து நடிக்க உள்ளதாகவும் படக்குழு இதனை சீக்ரெட்டாக வைத்திருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. அது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *