சிவகார்த்திகேயனை உள்ளே கொண்டு வர வேண்டாம்.. தடை போட்ட ரஜினிகாந்த்!

சிவகார்த்திகேயனை உள்ளே கொண்டு வர வேண்டாம்.. தடை போட்ட ரஜினிகாந்த்!
  • PublishedApril 26, 2023

சிவகார்த்திகேயனுக்கு ரஜினிகாந்த் ஒரு விஷயத்தில் தடை போட்டுவிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தர்பார், அண்ணாத்த படங்கள் கொடுத்த அடிக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த்.

இதில் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ரஜினி மற்றும் நெல்சன் என இருவருக்குமே இந்தப் படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடந்தது. ரஜினிக்கான போர்ஷன் முடிந்த சூழலில் மற்றவர்களுக்கான ஷூட்டிங் இப்போது நடந்துவருகிறது. இந்த ஷூட்டிங் விரைவில் முடிவடையும் என்றும் அதற்கு அடுத்ததாக போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை நெல்சன் தொடங்கவிருக்கிறார் என்றும் தெரிகிறது.

ஜெயிலர் படமானது முதலில் தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் ரிலீஸாகும் என தகவல் வெளியானது. ஆனால் படத்தின் ஷூட்டிங் விரைவிலேயே முடிவடையவிருப்பதால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடித்து ஆகஸ்ட் 10ஆம் திகதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. ஆகஸ்ட் 11ஆம் திகதி சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Nelson casts powerful female villain opposite Rajinikanth in 'Thalaivar 169'? - Tamil News - IndiaGlitz.com

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனை எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என நெல்சன் திலீப்குமார் ஆசைப்பட்டாராம். ஆனால் அதற்கு ரஜினிகாந்த் ஆரம்பத்திலேயே தடை போட்டுவிட்டாராம். அதாவது தான் நடிக்கும் படம் தன்னுடைய படமாக மட்டுமே வெளியாக வேண்டும். இந்தப் படத்துக்குள் சிவகார்த்திகேயனை உள்ளே கொண்டு வந்தால் தேவையில்லாமல் அது பல யூகங்களை எழுப்பும் என அவர் நினைத்ததால்தான் இந்த முடிவை எடுத்தார் என கூறப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் டாக்டர் படம் மூலம் பெரிதும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும்கூட. சிவகார்த்திகேயனும் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் ரஜினியுடன் நடிக்க வைத்தால் அது சிவகார்த்திகேயனுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும் என அவர் நினைத்தார் என்று சிலர் கூறுகின்றனர். இருப்பினும் ரஜினி முட்டுக்கட்டை போட்டுவிட்டதால் அதனை அவரால் மீற முடியவில்லை. அதுமட்டுமின்றி பீஸ்ட் படம் சந்தித்த படுதோல்வியால் நெல்சன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனால் ஜெயிலர் படத்தின் மூலம் தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நெல்சன்.

எனவே ஜெயிலர் படத்தில் எந்த பஞ்சாயத்தும் எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான், சிவகார்த்திகேயனுக்கு ரஜினி நோ சொன்னவுடனேயே நெல்சன் மறுவார்த்தை பேசாமல் ஒத்துக்கொண்டார் என்றும் கோலிவுட்டில் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *