படங்கள் பற்றிய வதந்திகளை பரப்பாதீங்க…அஸ்வத் மாரிமுத்து

படங்கள் பற்றிய வதந்திகளை பரப்பாதீங்க…அஸ்வத் மாரிமுத்து
  • PublishedMarch 22, 2025

ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே வரவேற்பை பெற தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கினார்.

சமீபத்தில் வெளியான இப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்தப்படியாக நடிகர் சிம்புவின் படத்தை இயக்க போகிறார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் சில தினங்களாக சிம்பு படத்திற்கு பின் தனுஷ் படத்தை இவர் இயக்க போவதாக செய்தி பரவியது. இதை மறுத்துள்ள அஸ்வத், ‛‛எனது அடுத்த படங்கள் பற்றிய வதந்திகளை பரப்பாதீங்க.

என் அடுத்த படம் முடிவாகும்போது அதை நானே முதலில் உங்களுடன் பகிர்வேன்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *