விருதுநகர் தொகுதிக்காக மோதும் ராதிகா மற்றும் விஜயகாந்த் மகன் பிரபாகரன்… பக்கத்துல யாருப்பா?
லோக்சபா தேர்தலில் தென் தமிழ்நாட்டின் விருதுநகர் தொகுதி தற்போது விஐபி தொகுதியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. விருதுநகர் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை ராதிகா சரத் குமார், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கக் கூடும் என்பதால் தேசிய அளவில் கவனம் பெறும் தொகுதியாகி இருக்கிறது விருதுநகர்.
விருதுநகர் தொகுதியாக மாறிய பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் 2009-ம் ஆண்டு லோசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுகவின் ராதாகிருஷ்ணன் 406,694, மதிமுகவின் வைகோ 261,143, திமுகவின் ரத்தினவேலு 241,505, காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் 38,482 வாக்குகளைப் பெற்றனர். அத்தேர்தலில் காங்கிரஸுக்கு 4-வது இடம்தான் கிடைத்தது.
ஆனால் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் 4,70,883 வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் தற்போது களமிறங்கியுள்ள மூவரும் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தவர்களாக உள்ளனர். இதனால் குறித்த தொகுதியின் தேர்தல் உற்று நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.