இலங்கை வருகின்றார் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

இலங்கை வருகின்றார் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
  • PublishedSeptember 1, 2023

பிரபல தென்னிந்திய நடிகரான டக்குபதி வெங்கடேஷ், தனது அடுத்த தெலுங்கு திரைப்படத்திற்கான அட்டவணையின் ஒரு பகுதியாக படப்பிடிப்பிற்கு இலங்கை வரவுள்ளார்.

தகவல்களின்படி, வெங்கடேஷ் மற்றும் 14 முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

நடிகர்களான நவாசுதீன் சித்திக் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் படப்பிடிப்பின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்களின் வருகை மற்றும் அட்டவணைக்கான தயாரிப்பு பணிகள் இலங்கையின் ஐங்கரன் மீடியா சொல்யூஷன்ஸால் நிர்வகிக்கப்படுகிறது.

அண்மைக் காலங்களில் பல இந்திய நடிகர்கள் தனிப்பட்ட மற்றும் பணி தொடர்பாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர், மேலும் இலங்கையின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் உதவியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *