புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல துணை நடிகை திடீர் மரணம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல துணை நடிகை திடீர் மரணம்
  • PublishedJune 6, 2024

புற்றுநோய் ஆரம்பத்திலேயே கவனிக்கப்பட்டால் அதனை கட்டுக்குள் கொண்டு வந்து அதில் இருந்து ஒருவரை காப்பாற்றமுடியும்.

அதே சமயம் கடைசி நேரத்தில் புற்றுநோய் இருப்பது தெரியவரும் பிரபலங்கள் சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது.

அண்மையில் கூட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளையராஜாவின் மகள் பவதாரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரைத் தொடர்ந்து தற்போது துணை நடிகையாக பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள விஜயகுமாரி இன்று காலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சென்னை வளசரவாக்கத்தில் தங்கி சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவருக்கு புற்றுநோய் இருக்கும் தகவல் மூன்றாவது ஸ்டேஜில் தான் தெரிய வந்த நிலையில், இதற்காக 3 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

தன்னுடைய சிகிச்சைக்காக உதவ வேண்டும் என KPY பாலா உள்ளிட்ட பலரிடம், உதவியை நாடினார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இவரது மரணம் திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளம் மூலம் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *