த்ரிஷா எப்படி இவ்வாறு கேரக்டரை தேர்ந்தெடுத்தார்…கோவத்தில் ரசிகர்கள்

த்ரிஷா எப்படி இவ்வாறு கேரக்டரை தேர்ந்தெடுத்தார்…கோவத்தில் ரசிகர்கள்
  • PublishedJune 6, 2025

தக் லைஃப் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. எப்படி எப்படியோ எதிர்பார்த்தோம் ஆனால் இப்படி எதிர்பார்க்கல என்பதுதான் ஒட்டுமொத்த ஆடியன்ஸின் கருத்து.

அதிலும் த்ரிஷாவின் கேரக்டர் யாருக்கும் பிடிக்கவில்லை. படத்தின் முதல் பாதியில் கமலுக்கு காதலியாகவும் இரண்டாம் பாதியில் சிம்புவுக்கு காதலியாகவும் வரும் கேரக்டரை எப்படி அவர் தேர்ந்தெடுத்தார்.

ஏற்கனவே விடாமுயற்சி படத்தில் புருஷனை விட்டு வேற ஒருத்தனை காதலிப்பது போல் நடித்திருப்பார். அதேபோல் குட் பேட் அக்லியில் புருஷனிடம் கோவிச்சுக்கிட்டு போவது போல் நடித்து இருப்பார்.

இப்ப தக் லைஃப் படத்துல இப்படி ஒரு கேரக்டர். இந்த மாதிரி கதாபாத்திரங்களை இவர் தேர்ந்தெடுக்கிறாரா அல்லது இவரை தேடி இப்படி வருகிறதா என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது

இதுக்கு என்ன காரணம் ஏன் இந்த மாதிரி கேரக்டரில் நடிக்கிறீங்க ஒரு வேலை டாப் ஹீரோக்களின் படத்தில் நடித்தால் போதும் என்ற மனநிலைக்கு திரிஷா வந்து விட்டாரா.

இதுக்கு மேலும் பவர்ஃபுல்லான கேரக்டர்கள் கிடைக்காது. அதனால் வந்தவரை லாபம் என நடிக்கிறாரா ஒண்ணுமே புரியலையே என அவருடைய ரசிகர்கள் இப்போது ஆதங்கத்தை கொட்டி தீர்க்கின்றனர்.

இதற்கு த்ரிஷா தான் பதில் சொல்ல வேண்டும். ஆக மொத்தம் அடுத்தடுத்த படங்களில் நடிக்கிறேன் என்ற பெயரில் இமேஜை டேமேஜ் செய்து கொண்டார் மாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *