படம் இயக்க ஆசைபடும் கார்த்தி…கருத்துக்களை வெளியிடும் ரசிகர்கள்

படம் இயக்க ஆசைபடும் கார்த்தி…கருத்துக்களை வெளியிடும் ரசிகர்கள்
  • PublishedJune 19, 2025

தமிழ் சினிமாவில் 2007-ஆம் ஆண்டு “பருத்திவீரன்” மற்றும் 2010-ஆம் ஆண்டில் “ஆயிரத்தில் ஒருவன்” படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தைப் பிடித்தவர் நடிகர் கார்த்தி.

சினிமாவில் அவ்வப்போது பெரிய நடிகர்கள் பேட்டி கொடுத்து அது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாவது வழக்கம். அந்த வகையில் கார்த்தி கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு திரை விழாவில் “நீங்கள் இயக்குனராக விரும்புகிறீர்களா என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு” : சிரித்தபடியே கார்த்தி சொன்ன பதில் “எனக்கு படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது, ஆனால் இப்போது அதை கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் காலம் வேண்டும்”.

நடிகர் கார்த்திக் சொன்ன இந்த சாதாரண பதில் இப்போது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தி எந்த படம் தேர்ந்தெடுத்தாலும் அதில் ஒரு நல்ல கருத்து இருந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் மனிரத்தினம், லோகேஷ் கனகராஜ், பா.ரஞ்சித், பாண்டியராஜ் போன்றவர்களுடன் பணியாற்றிய அனுபவமும் நிறைய இருக்கிறது.

இவரது மாஸான நடிப்பும், கதை தேர்வு மற்றும் தயாரிப்பு அறிவு சினிமாவில் இவருக்கென ஒரு தனி மதிப்பையே உருவாக்கிக் கொடுத்துள்ளது.

கார்த்தி இயக்கும் படம் நிச்சயமாக திரையில் நல்ல ஒரு கதைக்களம் நிறைந்த படமாக இருக்கும் எனவும், இவ்வளவு திறமையான நடிகர் திரைப்படத்தை இயக்கினால் சினிமாவின் தரம் உயரும் எனவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *