பீனிக்ஸ் படம் சூர்யாவிற்காக மட்டும் எடுக்கவில்லை…இயக்குனர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 4 – ம் தேதி வெளியானது.

இந்நிலையில்,பீனிக்ஸ் பட வெற்றி விழாவில் இயக்குநர் சூர்யாவை ட்ரோல் செய்வது குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” பீனிக்ஸ்’ படம் சூர்யாவுக்காக மட்டும் எடுக்கப்பட்டது கிடையாது. சூர்யா மீது குற்றச்சாட்டு கூறுவோருக்கும், அவரை விமர்சித்து டிரோல் செய்வோருக்கும் நான் சொல்லிக்கொள்வது.திரைப்பட விளம்பரங்கள்

‘நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை, இந்த படத்தின் மூலமாக புதிதாக சினிமாவில் எட்டிப்பார்த்துள்ள அனைவரது வாழ்க்கையிலும் விளையாடுகிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்