சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்த கௌதம் மேனன்!
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். இந்த படம் பல போராட்டத்திற்கு பிறகு வரும் ஜூலை 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே கௌதம் மேனன் இனி டைரக்சனுக்கு சரிப்பட்டு வரமாட்டார். நடிப்பில் தான் பிச்சு உதறிக் கொண்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது.
இதனால் மறுபடியும் தன்னுடைய டைரக்சனை துவங்கி இருக்கும் கௌதம் மேனன் ஹிட் கொடுத்த படத்தின் இரண்டாம் பாகத்தை அதிரடியாக கையில் எடுத்திருக்கிறார். இதற்கு காரணம் சமீபத்தில் கமல் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தை ரீ ரிலீஸ் செய்ததுதான்.
இந்த படத்திற்கு ரசிகர்களிடம் முன்பை போலவே அமோக வரவேற்பு கிடைத்ததால் அந்த படத்தின் 2ம் பாகத்தை எடுப்பதற்கான முழு ஸ்கிரிப்ட் வேலையையும் கௌதம் மேனன் முடித்துவிட்டாராம். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கமல்ஹாசனுடன் பேச்சுவார்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.