சத்தமில்லாமல் முன்னணி நடிகரின் படத்தையே தட்டி தூக்கிய கவின்!
லிஃப்ட், டாடா இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. ஆனால் அதற்குள் சைலண்டாக ஒரு படத்தை 10 நாள் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளார் கவின்.
பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் எலன் அடுத்ததாக ஸ்டார் என்ற படத்தை ஹரிஷ் கல்யாணை ஹீரோவாக வைத்து ஆரம்பித்தார். ஸ்டார் படத்தின் போஸ்டரை ஹரிஷ் கல்யாண் இருப்பது போல் வெளியிட்டார்கள். அதில் தளபதி ரஜினி ஸ்டைலில் மாஸ் லுக்கில் இருந்தார்.
படத்தின் கதை சின்ன ஆர்டிஸ்ட் முன்னணி நடிகராக மாறுவதுதான். இந்த படத்தின் கதை நன்றாக இருந்ததால் தனுஷை வைத்து எடுக்கலாம் என்று தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைத்தது.இந்நிலையில். அந்த வாய்ப்பை தற்போது கவின் தட்டி பறித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பத்து நாட்கள் யாருக்கும் தெரியாமல் நடந்து முடிந்துள்ளது. தற்போது தனுஷ் வாய்ப்பை தட்டி தூக்கிய கவின் படத்தின் கதையை கேட்டு எப்படியோ கெஞ்சி கூத்தாடி வாய்ப்பை பெற்று விட்டார்.