2025ஆண்டு ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக…GBU

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.
அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருந்தார். த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், ரெடின் கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
முதல் நாளில் இருந்தே வசூல் சாதனை படைத்து வரும் இப்படம் உலகளவில் 11 நாட்களில் ரூ. 240 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் லாபம் கொடுத்ததா என்கிற கேள்விக்கான பதில் கிடைத்துள்ளது.
இப்படம் தமிழ்நாடு முதல் உலகளவில் ரிலீஸான அனைத்து ஏரியாக்களிலும் லாபத்தை அடைந்துள்ளது என தெரியவந்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக GBU மாறியுள்ளது.