GOAT ; வெங்கட் பிரபு முதல் சினேகா வரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

GOAT ; வெங்கட் பிரபு முதல் சினேகா வரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
  • PublishedSeptember 5, 2024

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள, ‘கோட்’ திரைப்படம் நடிக்க விஜய் 200 கோடி சம்பளமாக பெற்ற நிலையில், மற்ற நடிகர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 5000-திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘கோட்’ படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால்… 1000 கோடி வசூலை தளபதி எட்டுவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், வசூலுக்கு முன்பே விஜய் நடித்ததால் லாபகரமான படமாக அமைத்துள்ளது என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார்.

‘கோட்’ திரைப்படம் உருவாக காரணமாக இருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு தான், விஜய்க்கு அடுத்தபடியாக அதிக பச்சமாக சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ‘கோட்’ படத்திற்காக வெங்கட் பிரபு 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா… ‘கோட்’ படத்தில் தளபதி விஜய்யின் நண்பராக நடித்துள்ளார். சமீப காலமாக பல படங்களில் படு பிசியாக நடித்து வருவதோடு, நடன இயக்குனராகவும் இருக்கும் இவர், இப்படத்தில் நடிக்க, 2 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபு தேவா ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க 8 முதல் 10 கோடி வரை சம்பளமாக பெற்று வரும் நிலையில், இப்படத்தில் குணச்சித்திர ரோலில் நடித்துள்ளதுள்ளதால் குறைவான சம்பளமே பெற்றுள்ளார்.

90-களில் தளபதி விஜய்யை விட பல லட்சம் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் தான் பிரஷாந்த். தளபதி விஜய்யுடன் இதுவரை இணைந்து நடித்திடாத இவர், விஜய்க்கு நண்பராக… ஒரு மேலதிகாரி போன்ற ரோலில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்க இவருக்கு 75 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூத்த நடிகர் ஜெயராம், 80-பது மற்றும் 90-கால கட்டத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர். இவர் ஒரு மலையாள நடிகர் என்றாலும், தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக தொடர்ந்து குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் துப்பாக்கி படத்திற்கு பின்னர் விஜய்யுடன் நடித்துள்ள இந்த படத்திற்காக, 50 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.

வில்லன் – ஹீரோ என தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நாயகனான அஜ்மல்… முதல் முறையாக தளபதி விஜய்யுடன் இணைந்து முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் நடிக்க இவர், சம்பளமாக 50 லட்சம் பெற்றுள்ளார்.

ஹாரா திரைப்படத்தின் மூலம் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகர் மோகன், ‘கோட்’ படத்தில் வில்லனாக நடித்துள்ள நிலையில் இப்படத்திற்காக சுமார் 40 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

வசீகரா படத்திற்க்கு பின்னர், பல வருடம் கழித்து தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சினேகா… ‘கோட்’ படத்தில் நடிக்க 30 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *