13 நாட்களில் கோட் படத்தின் வசூல் இதுதான்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்

13 நாட்களில் கோட் படத்தின் வசூல் இதுதான்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்
  • PublishedSeptember 18, 2024

தளபதி விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் 13 நாட்களில் 400 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி வீட் போட்டு அறிவித்துள்ளார்.

கோட் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து தளபதி ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியாகி 13 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், மிகப்பெரிய வசூல் சாதனையை கோட் திரைப்படம் கடந்துள்ளதாகவும் தளபதியின் டேக் ஓவர் என அர்ச்சனா கல்பாத்தி தனது மகிழ்ச்சியை ஷேர் செய்துள்ளார்.

https://x.com/Ags_production/status/1836370397740036322

கோட் திரைப்படம் முதல் 4 நாட்களில் 288 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அர்ச்சனா கல்பாத்தி அறிவித்திருந்தார். அதன் பின்னர் அப்படியே அமைதியான நிலையில், கோட் திரைப்படம் சரியாக போகவில்லை என்றும் 300 கோடி தான் வசூல் செய்தது என்றும் 400 கோடி வர வாய்ப்பே இல்லை என யூடியூப் சேனலில் வழக்கம் போல பலர் பேச ஆரம்பித்தனர். இந்நிலையில், கோட் திரைப்படம் 13 நாட்களில் 413 கோடி ரூபாய் வசூலை உலகளவில் அள்ளியுள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி தற்போது அறிவித்து அனைவரது வாயையும் அடைத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *