சர்வதேச அளவில் விஜய் செய்யப் போகும் முதல் நாள் சாதனை….

சர்வதேச அளவில் விஜய் செய்யப் போகும் முதல் நாள் சாதனை….
  • PublishedSeptember 4, 2024

சோசியல் மீடியாவில் கடந்த சில நாட்களாகவே கலைகட்டி வந்த கோட் திருவிழா இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

நாளை படம் வெளிவர இருக்கும் நிலையில் தயாரிப்பு தரப்பு டிஜிட்டல் ப்ரோமோஷனில் வேகப்படுத்தி இருக்கிறது. அடுத்தடுத்த அப்டேட், பேட்டிகள், சுவாரஸ்யமான விஷயங்கள் என ஒவ்வொன்றும் ரசிகர்களை ஆர்வப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கோட் முதல் நாளிலேயே 50 கோடியை தாண்டி வசூலிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் கருத்து கணிப்புகள் சொல்கின்றன.

ஆனால் தயாரிப்பாளர் அர்ச்சனா உங்களுடைய கணிப்பு எல்லாம் உடைபடும் அளவுக்கு முதல் நாள் வசூல் இருக்கும். வெகு சுலபமாக 100 கோடியை இப்படம் தாண்டி விடும் என கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனாலும் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படம் நிச்சயம் இந்த வசூலை அடைந்து விடும் என தெரிகிறது. அது மட்டும் இன்றி இது சர்வதேச அளவில் விஜய் செய்யப் போகும் சாதனை என அர்ச்சனா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *