கோட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

கோட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
  • PublishedSeptember 6, 2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் முதன்முறையாக நடித்த திரைப்படம் கோட். நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், பிரேம்ஜி, ஜெயராம், மைக் மோகன், வைபவ், அஜ்மல், லைலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் படமாக கோட் உள்ளதால் இப்படத்திற்கு பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனங்களே வந்த வண்ணம் உள்ளன. பொதுவாக விஜய் படம் ரிலீஸ் ஆனால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இரண்டு விஷயம் தான்.

ஒன்று படத்தின் விமர்சனம், மற்றொன்று படத்தின் வசூல். அதன்படி கோட் திரைப்படம் முதல் நாளில் எத்தனை கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரிக்குவித்துள்ளது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் கோட் திரைப்படத்திற்கு முதல் நாளில் கம்மியான வசூலே கிடைத்துள்ளதாம். லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ.148 கோடி வசூலித்து இருந்தது. ஆனால் கோட் படம் உலகளவில் வெறும் ரூ.73 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் தமிழ் நாட்டில் மட்டும் இப்படம் ரூ.38 கோடி வசூலித்து உள்ளதாம். அதேபோல் அப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் ரூ.5 கோடியும், இந்தி வெர்ஷன் ரூ.1.7 கோடியும் வசூலித்து இருக்கிறதாம். கேரளாவில் இப்படம் முதல் நாளில் ரூ.2 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஹைப் இன்றி வெளியானதே இப்படத்தின் வசூல் சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *