GOAT படத்திற்கு போட்ட காசை ப்ரீ சேலில் எடுக்கும் AGS – மொத்தம் எவ்வளவு தெரியுமா?
GOAT படம் விஜய் இதுவரைக்கும் தேர்ந்தெடுக்காத சயின்ஸ் பிக்சன் கதை என்பது எல்லோருக்கும் தெரியும்.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு விஜய் சினேகாவுடன் கெமிஸ்ட்ரி ஏற்படுத்தி இருப்பது படத்தின் பெரிய பாசிட்டிவாக இப்போது அமைந்திருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என பழைய ஹீரோக்கள் எல்லோரையும் ஒன்று கூட்டி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டார்கள். இதனாலேயே GOAT படத்தின் பிசினஸ் எகிறி விட்டது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள வர்ஷனின் GOAT பட டிஜிட்டல் உரிமை 125 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாக டைம்ஸ் என்டர்டெயின்மெண்ட் அறிவித்திருந்தது. அது மட்டும் இல்லாமல் ஹிந்தி வெர்ஷன் மட்டும் 25 கோடி ரூபாய்க்கு விற்பனையாக இருக்கிறது.
மொத்தமாக GOAT படத்தின் டிஜிட்டல் உரிமை 150 கோடியாகும். தற்போது பெயர் மற்றும் ஒரு அப்டேட்டை வலைப்பேச்சு சேனல் கொடுத்திருக்கிறது. பிரபல யூடியூபர் பிஸ்மி GOAT படத்தின் தெலுங்கு தியேட்டர் உரிமையை மைத்ரி மூவிஸ் 15 கோடிக்கு வாங்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
மேலும் தமிழ்நாட்டின் திரையரங்கு உரிமையை ரோகிணி பிக்சர்ஸ் 88 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறதாம். படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 300 கோடியாகும். டிஜிட்டல் விற்பனை, தியேட்டர் விற்பனை என இப்போதே படம் 250 கோடிக்கு மேல் லாபம் பார்த்து விட்டது.