விஜய்யின் கோட் எப்படி இருக்கு…? முழு விமர்சனம்

விஜய்யின் கோட் எப்படி இருக்கு…? முழு விமர்சனம்
  • PublishedSeptember 5, 2024

கடந்த சில வாரங்களாக வெங்கட் பிரபு அண்ட் கோ கோட் படம் பற்றி ஏகப்பட்ட அலப்பறை கொடுத்து வந்தனர். இதனால் இங்கே ஒட்டு மொத்த மீடியாவின் பார்வையும் இன்று விஜய் பக்கம் திரும்பி இருக்கிறது.

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் கோட் இன்று வெளியாகியுள்ளது. இதற்காகவே காத்திருந்த விஜய் ரசிகர்கள் படத்தை ஆகா ஓகோ என கொண்டாடி வருகின்றனர். இதன் விமர்சனத்தை இங்கு விரிவாக காண்போம்.

விஜய் மற்றும் அவருடைய நண்பர்கள் குழு ஒரு ஸ்குவாட் போன்று இணைந்து தீர்க்க முடியாத பிரச்சனைகளை கூட அசால்டாக முடித்து விடுவார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் அரைகுறையாக செய்த ஒரு விஷயம் அவர்களுக்கே எதிராக திரும்புகிறது.

இதில் காந்தியாக வரும் விஜய் தன் மனைவி குழந்தையுடன் தாய்லாந்து செல்லும்போது மகனை தவற விடுகிறார். ஆனால் சில வருடங்கள் கழித்து அப்பாவும் மகனும் சந்திக்க நேரிடுகிறது. அதன் பிறகு நடந்தது என்ன? விஜய் குழுவினருக்கு எதிராக நடக்கும் சதி என்ன? விஜய் அதை முறியடித்தாரா? போன்ற கேள்விகளுக்கு விடையளித்துள்ளார் வெங்கட் பிரபு.

கதையின் மையக்கரு இதுவாக இருந்தாலும் படத்தில் பல சர்ப்ரைஸ் விஷயங்கள் இருக்கிறது. திரிஷாவின் டான்ஸ், கிளைமாக்ஸ் காட்சியில் வரும் தோனி, சிவகார்த்திகேயன், கேப்டன் ஏ ஐ டெக்னாலஜி என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இவை அனைத்துமே விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக தான். இது தவிர கதை எப்படி இருக்கிறது என்று கேட்டால் பெரிய சுவாரஸ்யம் ஒன்றும் இல்லை. சாதாரண ஒரு விஷயத்தை சில டெக்னாலஜிகளை வைத்து அலங்கரித்துள்ளார் இயக்குனர்.

அதிலும் விஜய்யின் பழைய படங்களை எல்லாம் கண்முள் நிறுத்துகிறேன் என ஒரு குளறுபடியையும் செய்து இருக்கிறார். இதில் பிளஸ் என்று பார்த்தால் விஜயின் தரிசனம், ஆக்சன் காட்சிகள் ஆகியவை தான். மேலும் பல சாகச காட்சிகள், டீ ஏஜிங், மேக்கிங் அனைத்தும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

மைனஸ் என்று பார்த்தால் ரிலீசுக்கு முன்பே கேமியோ கதாபாத்திரங்கள் சம்பந்தப்பட்ட சஸ்பென்ஸ் உடைபட்டுவிட்டது. யுவன் சங்கர் ராஜாவின் இசை பலவீனமாக இருக்கிறது. பல படங்களின் பிஜிஎம்-ஐ கொண்டு வந்து நிரப்பி இருக்கிறார்.

படத்தில் ஏகப்பட்ட ரெஃபரன்ஸ் காட்சிகள் கொட்டி கிடக்கிறது. இதை பார்க்கும் போது வெங்கட் பிரபு சொந்தமாக எந்த சரக்கையும் கொண்டு வரவில்லையா என நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் படத்தை மூன்று மணி நேரம் போர் அடிக்காமல் என்ஜாய் செய்ய முடியும். ஆக மொத்தம் கோட் விஜய் ரசிகர்களுக்கான பக்கா ட்ரீட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *