GOAT படத்தின் அடுத்த சூட்டிங் எங்க தெரியுமா?.. புகைப்படங்களை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி

GOAT படத்தின் அடுத்த சூட்டிங் எங்க தெரியுமா?.. புகைப்படங்களை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி
  • PublishedApril 7, 2024

நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் முன்னதாக கேரளா, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்து தற்போது அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் மாஸ்கோவிற்கு சென்றுள்ளனர்.

இதையொட்டி முன்னதாக துபாய் விமான நிலையத்தில் விஜய் காணப்படும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. மாஸ்கோவில் தொடர்ந்து இந்தப் படத்தின் சூட்டிங் இரு வாரங்கள் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து ஷூட்டிங் நடக்கும் இடத்தின் புகைப்படங்களை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்தமாக படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது துவங்கியுள்ள இந்த ஷூட்டிங் லொகேஷன் புகைப்படங்களை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகவுள்ளது. இது விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் இணைந்து ஆட்டம் போட்ட பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *