GOAT ரிலீஸ் எப்போது தெரியுமா? ஹொட் அப்டேட்….

GOAT ரிலீஸ் எப்போது தெரியுமா? ஹொட் அப்டேட்….
  • PublishedJanuary 9, 2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் The Greatest of All Time என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறாராம் வெங்கட் பிரபு.

புரொடக்‌ஷனை விட போஸ்ட் புரொடக்‌ஷனில் தான் இந்த படத்துக்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளதால் வரும் மார்ச் மாதத்துக்குள்ளே படப்பிடிப்பை முடித்து விடவும் வெங்கட் பிரபு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

இந்த படம் அதிகமாக போஸ்ட் புரொடக்‌ஷனில் தான் மெருகேற்றப்பட வேண்டி உள்ள நிலையில், பக்ரீத் பிரியாணியாக GOAT வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை ஜூன் 16 அல்லது 17ல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த வாரம் ஜூன் 13ம் தேதி வியாழக்கிழமையே தி கோட் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஏப்ரல் முதல் ஜூன் வரை தொடர்ந்து இந்த ஆண்டு அடுத்தடுத்து பெரிய படங்கள் வரிசை கட்டி வெளியாக காத்திருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *