என்ன நண்பா ரெடியா? அடுத்த சிங்கிள் பாடல் ரெடி

என்ன நண்பா ரெடியா? அடுத்த சிங்கிள் பாடல் ரெடி
  • PublishedJuly 30, 2024

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான “லியோ” திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. அதனைத் தொடர்ந்து தனது 68வது திரைப்பட பணிகளை தொடங்கினார் தளபதி விஜய்.

இந்த ஆண்டு துவக்கத்தில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவிப்பை வெளியிட்டார் விஜய். அதுமட்டுமா, தனது சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு, முழுநேர அரசியல் தலைவராக பணியாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார் தளபதி விஜய். ஆகவே அவருடைய நடிப்பில் வெளியாகவுள்ள இரு படங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள தகவலின்படி மூன்றாவது சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார். இணையத்தில் கசிந்த சில தகவல்களின்படி, இந்த பாடலை தளபதி விஜயோடு இணைந்து ஸ்ருதிஹாசன் பாடியிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *