இதுவரை GOAT செய்துள்ள வசூல் வேட்டை… மொத்த லாபம் எவ்வளவு தெரியுமா?

இதுவரை GOAT செய்துள்ள வசூல் வேட்டை… மொத்த லாபம் எவ்வளவு தெரியுமா?
  • PublishedOctober 1, 2024

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவான கோட் படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கோட் படத்தின் பட்ஜெட் 333.15 கோடியாகும். இதில் ரிலீசுக்கு முன்பே கோட் படத்தின் பிசினஸ் 416.25 கோடி. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்த லாபம் 83.10 கோடி ஆகும். தமிழ்நாட்டில் கோட் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் விநியோகம் செய்திருந்தது.

தமிழ்நாட்டில் மட்டும் கோட் படம் 205 கோடி வசூல் செய்திருந்தது. இதன் மூலம் அந்நிறுவனத்திற்கு 110 கோடி ஷேர் கிடைத்திருந்தது. இதன் மூலம் விநியோகஸ்தருக்கு 20 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. கோட் படத்தின் மூலம் கேரளா விநியோகத்திற்கு நஷ்டம் தான் கொடுத்துள்ளது.

உலக அளவில் கோட் படம் 440 கோடி வசூலை பெற்றிருக்கிறது. கோட் படத்தின் மூலம் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கடைசியாக 115.60 கோடி நெட் பிராஃபிட் கிடைத்துள்ளது. ஆகையால் இந்நிறுவனம் லாபத்தை தான் பெற்றிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *