அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ அப்டேட்டுக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ அப்டேட்டுக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்
  • PublishedFebruary 22, 2025

அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் அப்டேட் மாலை 7.03 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்டேட் வராததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘விடாமுயற்சி’ திரைப்படம் தள்ளிப் போனதால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் ‘குட், பேட் அக்லி’ ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என்று அவரது, அஜித்தின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவு பெற்று டப்பிங் பணிகளையும் அஜித் முடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் அப்டேட் மாலை 7.03 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்டேட் வராததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ட்விட்டரில் பலரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *