தினமும் புதுப்புது லுக்கில் விஜய்… மாஸ் போஸ்டர்களை இறக்கும் GOAT… இப்போ என்ன தெரியுமா???

தினமும் புதுப்புது லுக்கில் விஜய்… மாஸ் போஸ்டர்களை இறக்கும் GOAT… இப்போ என்ன தெரியுமா???
  • PublishedJanuary 4, 2024

‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 31ம் தேதி வெளியாகி வைரலாகியிருந்தது. ‘The Greatest Of All Time’ என்ற வரிகளுடன் வெளியாகியிருந்த இதில் இளம் வயது விஜய்யும், நடுத்தர வயதில் இருக்கும் விஜய்யும் மிஷனை முடித்துவிட்டு பாராசூட்டில் இறங்கி வருவதைப் போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இதன் மூலம் இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பது உறுதியாகியிருந்தது.

மேலும், ‘Light can Devour the Darkness but Darkness cannot consume the Light’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது.

இதையடுத்து நேற்று இப்படத்தின் இரண்டவது லுக் வெளியாகியுள்ளது. இதில் புல்லட்கள் தெறிக்க இரண்டு விஜய்யும் ஒரே பைக்கில் செல்லும் புகைப்படத்தைப் பார்க்கையில் இப்படம் இதுவரை வந்த விஜய் படங்களில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இரண்டு விஜய்யும் பைக்கிலேயே டைம் ட்ராவல் போகவும் வாய்ப்பிருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இதேவேளை, இன்று இப்படத்தின் மூன்றாவது லுக் வெளியாகி உள்ளது.

இதில், போர் விமானம் ஒன்று பறக்க யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடத்திற்கு முன் நெருப்புக்கு நடுவில் நின்று நடுத்தர வயது விஜய் கையில் துப்பாக்கியுடன் சுடுவதற்கு குறிவைப்பதைப் போன்று உள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *