ஹன்சிகா மீது போலீசில் பரபரப்பு புகார்… திரையுலகில் பெரும் அதிர்ச்சி
ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது அம்மா மீது குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை, ஹன்சிகாவின் அண்ணன் மனைவியான தொலைக்காட்சி நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸ் கொடுத்துள்ளார்.
ஹன்சிகாவும், அவரின் தாயார் மோனாவும் தன்னை கொடுமை படுத்துவதாக கூறி, இருவர் மீதும் குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில் நடிகை ஹன்சிகாவின் பதிவு ஒன்றும் வைரலாகி வருகிறது. ஆனால், ஹன்சிகா நேரடியாக இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால் அவரது சமூக ஊடகப் பதிவு ஹன்சிகாவின் மறைமுகமான பதிலாகப் பார்க்கப்படுகிறது.
ஹன்சிகா மோத்வானி தனது பதிவில், “சண்டைகள் போட்டுவிட்டு மீண்டும் வந்து நல்ல விஷயங்களைச் செய்ய நான் கொஞ்சம் வயதாகிவிட்டேன். நான் நலமாக இருக்கிறேன். அன்பு.” #Word! Just Mute People என்று எழுதி சிரிக்கும் ஈமோஜியையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு அவரின் அண்ணியை குறிப்பிட்டு தான் போயுள்ளதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.
மேலும் ஹன்சிகாவின் அண்ணி முஸ்கான் தனது கணவர் பிரசாந்த் மோத்வானி, மாமியார் மோனா மோத்வானி மற்றும் நாத்தனார் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் மீது FIR பதிவு செய்து, அவர்கள் மீது குடும்ப வன்முறை குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மும்பையின் அம்போலி காவல் நிலையத்தில் மோத்வானி குடும்பத்தினர் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498-A, 323, 504, 506 மற்றும் 34ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிங்க்வில்லாவின் அறிக்கையின்படி, ஹன்சிகாவும் அவரது தாயார் மோனாவும் தனது திருமணத்தில் தொடர்ந்து தலையிட்டதாக முஸ்கான் குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாகவே தனக்கும் பிரசாந்துக்கும் இடையேயான உறவு முறிந்ததாக அவர் கூறியுள்ளார்.
முஸ்கான் தனது கணவர் மீதும் குடும்ப வன்முறை குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது மட்டும் இன்று, அவர்கள் செய்த கொடுமை காரணமாக தனக்கு பெல்ஸ் பால்சி என்ற கடுமையான பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறுகிறார். இந்த நோயால் முஸ்கான் முகம் முடங்கிவிட்டது.
அதே போல் ஹன்சிகா உட்பட மோத்வானி குடும்பத்தின் மூன்று பேரும், தன்னிடம் விலையுயர்ந்த பரிசுகள் மற்றும் பணம் கேட்டதாக முஸ்கான் நான்சி ஜேம்ஸ் கூறியுள்ளார். மூவரும் சொத்து தொடர்பான மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக முஸ்கான் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளதாக. E-டைம்ஸிடம் உறுதி படுத்தியுள்ளது. ” தொலைக்காட்சி நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸ் கடந்த 2020 இல் ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த் மோத்வானியை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் திருமணம் செய்து கொண்ட சில வருடங்களிலேயே முஸ்கான் முக முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். ஹன்சிகாவின் திருமணத்தில் கூட முஸ்கான் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.