விஜய் கமர்சியல் ஹீரோவாக ஆகியமைக்கு இவர்தான் காரணமாம்!
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான் நீண்ட இடைவேளைக்கு பிறகு கருமேகங்கள் கலைகிறது என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தங்கர் பச்சான், கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கௌதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் கனகராஜ், யோகி பாபு உள்ளிட்ட பங்கேற்றனர்.
விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ‘நானும் பாரதிராஜாவும் ஒரே காலக்கட்டத்துல, ஒரே மாவட்டத்திலிருந்து சினிமாவை நோக்கி வந்தவர்கள்.
அவர் முதலில் இயக்குநராகிவிட்டார். அவரிடம் உதவி இயக்குநராக சேரணும்னு ஆசைப்பட்டேன். ஃபிரெண்டாவே இருப்போம்யா உன்னை எல்லாம் உதவி இயக்குநரா வச்சுக்க முடியாதுனு சொல்லிவிட்டார். சரி நானும் இயக்குநராகிக் காட்டுறேனு சொல்லிட்டு வந்தேன்.
என் மகன் விஜய் நடிகனாகனும்னு ஆசைப்பட்டப்போ நம்மள விட பெரிய டைரக்டர் யாராவது விஜய்யை அறிமுகப்படுத்துனா நல்லா இருக்குமே அப்படினு ஆசைப்பட்டு ஒரு ஆல்பம் ரெடி பண்ணிட்டு முதலில் சென்ற இடம் பாரதிராஜா ஆஃபிஸ். அப்போ அவர் பெரிய இயக்குநர். என்கிட்ட ஏன் கொண்டுவந்தஇ நீயே பண்ணுயா அப்படினு சொல்லிட்டார்.
இந்தப் படத்துல நல்ல கேரக்டர் பண்ணிருக்காரு கௌதம் வாசுதேவ் மேனன். விஜய்க்காக அவர் கிட்டயும் ஆல்பம் எடுத்துட்டு போய் வாய்ப்புகேட்டேன். நல்ல இயக்குநர்கள் ஆரம்பத்துல விஜய்யோட படம் பண்ணலஇ அது ஒரு வகையில் நல்லது. என் கையில் வந்ததுனால தான் கமர்ஷியல் ஹீரோவானார். அதுக்கு கடவுளுக்கு நன்றி” என்று பேசினார். அவர் பேசிய காணொலி தற்போது வைரலாகி வருகிறது.