ஜெயிலர் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் – ஒரே போடாய் போட்டார் அனிருத்

ஜெயிலர் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் – ஒரே போடாய் போட்டார் அனிருத்
  • PublishedAugust 4, 2023

ஜெயிலர் படத்தை பார்த்த அனிருத் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களை ரொம்பவே நம்பியிருந்தார் ரஜினிகாந்த். ஆனால் அவர் எதிர்பார்க்காதபடி படங்கள் படுதோல்வியை சந்தித்தன. தோல்வி மட்டுமின்றி எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை.

இதனால் உடனடியாக ஒரு கம்பேக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் சிக்கலாகிவிடும் என யோசித்தார் ரஜினிகாந்த்.

எதிர்பார்த்தபடியே ரஜினியை வைத்து சிறப்பான சம்பவத்தை செய்திருக்கிறார் நெல்சன். கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகி கோலிவுட்டில் ரஜினி தரமான கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு பத்தாம் தேதிக்கு காத்திருக்கின்றனர்.

ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமின்றி நெல்சன் ஸ்டைல் காமெடியும் படத்தில் இருக்கும் என்பதால் முழுமையான கமர்ஷியல் பேக்கேஜாக படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தை அனிருத் பார்த்துவிட்டார். அதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஜெயிலர் என குறிப்பிட்டு தீப்பொறி எமோஜி, சாம்பியன் கோப்பை எமோஜி உள்ளிட்டவற்றை பதிவிட்டிருக்கிறார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் படம் வேற லெவலில் இருக்கிறது என்பதை அனிருத் சொல்லிவிட்டார். எனவே அலப்பறைய கெளப்புறோம் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *