எச்சி பிளேட் கழுவிதான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் – முருகதாஸ் உருக்கம்!

எச்சி பிளேட் கழுவிதான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் – முருகதாஸ் உருக்கம்!
  • PublishedMarch 29, 2023

தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் டாப் இயக்குனர் ஒருவர்தான் ஏ.ஆர். முருகதாஸ்.

தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த பல கஷ்டங்களை அவர் உருக்கமாக மேடை நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.  அந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது மேடையில் பேசிய அவர், இந்த உலகத்தில் தன்னிச்சையாக யாராலும் நல்ல நிலைமைக்கு வந்துவிட முடியாது. நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு 100 பேர் உதவி செய்திருக்கிறார்கள். நான் முன்னேற வேண்டும் என நினைத்த 100 பேர் போட்ட பிச்சைதான்  என்னை சினிமாவில் அடையாளப்படுத்தியது.

நான் கேரியர் சாப்பாடு வாங்குவதற்காக ஏறி இறங்காத கடைகளே இல்லை. எச்சி பிளேட்,  டீ கிளாஸ் கழுவி தான் சினிமாவில் முன்னேற முடிந்தது. நான் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன் என்று ஏஆர் முருகதாஸ் மனம் உருகிப் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *