மில்லர் படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

மில்லர் படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!
  • PublishedMarch 29, 2023

நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக கைகோத்துள்ளார்.

குற்றாலத்தில் இதன் படப்பிடிப்பை தனுஷ் மீண்டும் தொடங்கியுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் 1930-40 களில் நடக்கும் கதை எனக் கூறப்படுகிறது. சில காலம் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருவம் இந்த படத்தில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படக்குழு பெரிய அளவில் காட்சியை பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பட குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *