உடைந்தது தனுஷ் – அனிருத் கூட்டணி : ஏற்றிவிட்டவரயே இப்படி இறக்கிவிடலாமா?

உடைந்தது தனுஷ் – அனிருத் கூட்டணி : ஏற்றிவிட்டவரயே இப்படி இறக்கிவிடலாமா?
  • PublishedMarch 30, 2023

கோலிவுட்டில்  தனுஷ் – அனிருத் கூட்டணி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இவர்களுடைய காம்போவில் வந்த பாட்டுக்கள் அத்தனையும் சூப்பர் ஹிட்டானவை.

தனுஷின் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். அதன் பிறகு இவர்களது காம்போவில் வரிசையாக எதிர்நீச்சல்,  வேலையில்லா பட்டதாரி, மாரி என பல படங்களில் இணைந்து பணியாற்றியிருந்தார்கள்.

முன்னணி இசையமைப்பாளராக மாறிய அனிருத்திற்கும் – தனிஷுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விரிசல் தற்போது  பெரிதாக மாறியுள்ளது. இதனால் ஏற்கனவே தனுஷின் 50-வது படத்தில் கமிட்டாகி இருந்த அனிருத்,  இப்பொழுது விலகுவதாக ஒரு செய்தி அடிபட்டு வருகிறது.

இந்த படத்திற்கு 6 கோடிகள் வரை சம்பளம் வாங்கவிருந்தார் அனிருத். ஆனால் இப்பொழுது கவின் நடிக்கும் புது படம் ஒன்றிற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தனுஷ் மற்றும் சன் பிக்சர்ஸின் படத்தில் வாங்கும் சம்பளம் 6 கோடியை தூக்கி எறிந்து விட்டு லோ பட்ஜெட் படமாகிய கவின் படத்திற்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் அவர்கள் இருவருக்குள்ளும் விரிசல் இருக்கிறது என்பதை ஊர்ஜிதப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *