”நான் வரேன் சார்” என விடைபெற்ற சில்க் ஸ்மிதா : பின் மரண செய்திதான் வந்தது – கண்கலங்கிய இயக்குனர்!

”நான் வரேன் சார்” என விடைபெற்ற சில்க் ஸ்மிதா :  பின் மரண செய்திதான் வந்தது – கண்கலங்கிய இயக்குனர்!
  • PublishedMarch 29, 2023

தமிழ் சினிமாவில் ஆரம்பக் காலங்களில் கவர்ச்சி என்ற சொல்லுக்கு பெயர்போனவர்தான் சில்க்சிமித்தா. என்னதான் இவர் கிளாமராக நடனமாடினாலும், அவர் மீது இன்றும் இரசிகர்கள் மிகப் பெரிய மரியாதையை கொண்டுள்ளார்கள்.

சில்க் என்ற பெயரை கூறும் போதே நினைவுக்கு வருவது என்னவோ, அவருடைய மர்மமான மரணம் தான். இது பற்றி நிறைய சினிமா நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். அந்தவகையில் மனோபாலா கூறியிருக்கின்ற ஒரு விடயம் தற்போது வைரலாகி வருகிறது.

தனது  யூடியூப் சேனலில் சில்க் ஸ்மிதா பற்றி சில சம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ள அவர்,  சில்க் ஸ்மிதாவிற்கு சிறந்த கற்பனை திறன் இருந்ததாக தெரிவித்தார்.

ஒருமுறை சில்க் ஸ்மிதா ஷூட்டிங்கில் இருந்த போது அந்த பகுதியில் சிலர்  குழந்தைகள் விளையாடும் சொப்பு சாமான்களை விற்றுக்கொண்டிருந்தார்களாம். அதை பார்த்த சில்க் ஸ்மிதா அவர்களிடம் சென்று சிறிய தோசைக்கல்,  கடாய் சட்டி எல்லாம் வாங்கி வந்தாராம்.

இதை ஏன் வாங்கியிருக்கிறாய் என மனோபாலா கேட்ட நிலையில் சிரிப்புடன் சென்ற சில்க் ஸ்மிதா மறுநாள் தோசைக்கல்லை காதில் தோடாகவும்,  குட்டி சட்டியை இடுப்பில் அணிந்த பெல்ட்டுடனும் இணைத்து வந்து ஆச்சரியப்படுத்தினாராம்.

மேலும் பேசிய அவர்  சில்க் ஸ்மிதா இறப்பதற்கு ஒரு நாள் முன்பாக தேம்பி,  தேம்பி அழுதுக் கொண்டிருந்த நிலையில்  எதுவும் பேசாமல் என் முகத்தை பார்த்துவிட்டு நான் வரேன் சார் என கூறினார்.

ஆனால் மறுநாள் தூக்கிட்டு சடலமாக கிடந்தார் என்ற செய்தி தன்னை உருக்குலைய வைத்ததாக மனோபாலா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *