புதிய சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் மிர்ச்சி செந்தில்!

புதிய சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் மிர்ச்சி செந்தில்!
  • PublishedMarch 29, 2023

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு தொடர்களில் ஒன்று சரவணன்-மீனாட்சி. இந்த தொடரில் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள்.

அவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக அமைய இருவரும் நிஜ வாழ்க்கையிலும் இணைந்தார்கள். இந்நிலையில்,  கடைசியாக மிர்ச்சி செந்தில் விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் 2ம் பாகத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து அவர் அடுத்து நடிக்கபோகும் சீரியல், அல்லது திரைப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.

தற்போது இது தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.  ஜீ தமிழ் வழங்கும் சீரியல் ஒன்றில் அவர் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணன்-தங்கைகள் கொண்ட கதையாம். நாயகியாக நித்யா ராம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

https://www.instagram.com/p/CqVSi2uvh1U/?utm_source=ig_embed&ig_rid=3b5820da-5e9a-48a9-bfd2-c1f0ac5fb633

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *