விவாகரத்திற்கு பிறகு வேறு ஒரு நடிகையுடன் ஒளிபடம் வெளியிட்ட நாகசைதன்யா!

விவாகரத்திற்கு பிறகு வேறு ஒரு நடிகையுடன் ஒளிபடம் வெளியிட்ட நாகசைதன்யா!
  • PublishedMarch 29, 2023

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நாக சைதன்யா. ஜோஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய பிரபலமான நாக சைதன்யா தன்னுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த நடிகை சமந்தாவை 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சில ஆண்டுகளின் பின் கருத்து வேறுபாடு காரணமாக சமந்தாவை விவாகரத்து பெற்றார். இந்நிலையில், அவர் தற்போது  நடிகை சோபிதா துலிபாலாவுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் இருவரும் வெளிநாட்டுக்கு சென்று டேட் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது லண்டனில் இருக்கும் ஒரு பாரில் சோபிதாவுடன் நாக சைதன்யா டின்னர் சாப்பிட்டு ஓட்டல் செஃப் உடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

படத்திற்காக லண்டன் ஷூட்டிங்கின் போது இருவரும் எடுத்த பழைய புகைப்படம் தான் அது என்று நாக சைதன்யா ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *