குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடி கியூட் வீடியோ வெளியிட்ட நயன்தாரா…

குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடி கியூட் வீடியோ வெளியிட்ட நயன்தாரா…
  • PublishedNovember 19, 2023

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக அறியப்படும் நடிகை நயன்தாரா, நேற்று தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன், தன்னுடைய குழந்தைகளான உயிர் மற்றும் உலகத்துடன் இந்த வருடம் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடினார்.

ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை நயன்தாராவுக்கு தெரிவித்து வந்த நிலையில், இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடித்து வரும் ‘டெஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ‘அன்னபூரணி’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஆகியவை வெளியானது.

மேலும் நயன்தாரா, கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று… வைரலான நிலையில், நேற்று இரவு நடிகை நயன்தாரா கணவர் மற்றும் குழந்தைகளுடன், பிறந்தநாள் கொண்டாடியபோது எடுத்து கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோவை வெளியிட்டு, நயன்தாரா… “நான் அதிகமாகக் கேட்டிருக்க முடியாது, கடவுள் இந்த 3 பசங்களை என் வாழ்க்கைக்கு கொடுத்துள்ளார். ஐ லவ் யூ என் உயிர் உலகம், விக்கி என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *