இணையத்தில் வேகமாக பரவும் ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி வீடியோ? உண்மையா?
நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். பான் இந்தியா நாயகியாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக தனுஷின் டி51 படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
கடந்த ஜனவரியில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்திலும் நடித்திருந்தார் ராஷ்மிகா.
https://twitter.com/itzSekar/status/1721460485764399592
தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம்வந்துக் கொண்டிருக்கும் ராஷ்மிகாவை அசிங்கப்படுத்தும்வகையில் டீப்ஃபேக் மூலம் அவரது முகத்தை வேறொரு நபரின் உடலில் பொருத்தி தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ராஷ்மிகாவின் வளர்ச்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.
முகம் சுளிக்க வைக்கும்வகையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
https://twitter.com/AbhishekSay/status/1721088692675072009
இந்த வீடியோ டீப்ஃபேக் தான் என்பதை கண்டறிந்துள்ள பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் இந்த வீடியோவிற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஷாரா படேல் என்ற நடிகையின் ஒரிஜினல் வீடியோவில் ராஷ்மிகாவை இணைத்து இந்த வீடியோ வெளியாகியுள்ளதையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் இது குறித்து நடிகை ராஷ்மிகா மிகவும் வேதனையடைந்து தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்,
I feel really hurt to share this and have to talk about the deepfake video of me being spread online.
Something like this is honestly, extremely scary not only for me, but also for each one of us who today is vulnerable to so much harm because of how technology is being misused.…
— Rashmika Mandanna (@iamRashmika) November 6, 2023