“வாய்ப்பு கிடைத்தால் தளபதி 69 படத்தை இயக்குவேன்..” கௌதம் மேனன்

“வாய்ப்பு கிடைத்தால் தளபதி 69 படத்தை இயக்குவேன்..” கௌதம் மேனன்
  • PublishedFebruary 23, 2024

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜோஷ்வா இமை போல் காக்க. அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். அவரது சகோதரி மகன் வருண் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் இன்றைய தினம் ரிலீசாக உள்ள நிலையில் நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது கௌதம் மேனன் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இதன்போது படத்தின் இயக்குனர் கௌதம் மேனனிடம் பல கேள்விகளை பத்திரிகையாளர்கள் அடுக்கினர். அதில் விஜயின் தளபதி 69 படம் குறித்தும் கேள்வி இருந்தது.

தளபதி 69 படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் செய்வீர்களா என்று ஒருவர் கேள்வி எழுப்ப, கண்டிப்பாக செய்வேன், ஏன் செய்ய மாட்டேன் என்று கௌதம் மேனன் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது The greatest of all tme படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தொடர்ந்து நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்துள்ளார்.

இதனால் தளபதி 69 படத்தை இயக்கும் இயக்குனர் குறித்து அதிகமான கவனம் ஏற்பட்டுள்ளது. படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் டிவிவி தயாரிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் முதல் த்ரிவிக்ரம் வரை இயக்குவதாக அடுத்தடுத்து தினந்தோறும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது கௌதம் மேனனிடமும் தளபதி 69 படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவரும் மிகவும் ஆர்வத்துடன் பதில் அளித்துள்ளார்.

கௌதம் மேனன் கூட்டணியில் அதிரடி ஆக்சன் அல்லது காதல் படத்தில் விஜய் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை இப்போதே ரசிகர்கள் கற்பனை செய்து பார்த்து வருகின்றனர். தளபதி 69 படம் குறித்த அறிவிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *