”போட்டோ எடுத்தா ஃபோன உடைச்சிடுவேன்” – கடுப்பாகி இரசிகரை திட்டிய நயன்தாரா!

”போட்டோ எடுத்தா ஃபோன உடைச்சிடுவேன்” –  கடுப்பாகி இரசிகரை திட்டிய நயன்தாரா!
  • PublishedApril 6, 2023

தன்னை படம் பிடித்த ரசிகரின் செல்போனை உடைத்துவிடுவேன் என நடிகை நயன்தாரா மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகையான நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேற்று கும்பகோணம் அருகே உள்ள குல தெய்வ கோவிலுக்கு வழிப்பாட்டிற்கு சென்றனர்.

இதனை அறிந்த இரசிகர்கள் அவரை காண்பதற்காக திரண்டிருந்தனர். அப்போது நயன்தாராவை புகைப்படம் எடுக்க முற்பட்டுள்ளனர்.

இருப்பினும் அதனை விரும்பாத நயன்தாரா,  சாமி கும்பிட வந்திருக்கிறோம். 5 நிமிஷம் ப்ளீஸ் என கோபமாக பேசியுள்ளார். இதனையடுத்து  தாராசுரம் ஐரவாதீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அப்போது கல்லூரி மாணவிகள் சிலர் நயன்தாராவுடன் போட்டோ எடுத்தனர். அப்போது ஒரு மாணவியின் கை நயன்தாரா மீது பட்டுவிட்டது. இதனால் கடுப்பான நயன்தாரா அந்த மாணவியை எச்சரித்துவிட்டு சென்றார்.

சாமி தரிசனத்தை முடித்துவிட்டு திருச்சி ரயில் நிலையத்தற்கு சென்று, ரயிலில் ஏறியுள்ளனர். அப்போது இரசிகர்கள் ஒருவர் அவரை புகைப்படம் எடுக்க முற்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த நயன்தாரா, போட்டோ எடுத்தால் போனை உடைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *